உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சூரிய கிரகணம் கோவில்கள் நடை மூடல்

 சூரிய கிரகணம் கோவில்கள் நடை மூடல்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர், ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில்கள் உட்பட அனைத்து கோவில்களும் வரும் 17ம் தேதி மதியம் 3:00 மணியளவில் சூரியகிரகணத்தையொட்டி மூடப்படுகிறது. நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நிகழ உள்ளது. அமாவாசை தினத்தன்று சந்திரன், பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் இருக்கும். அப்போது சூரியனில் இருந்து வரும் ஒளியை சந்திரன் மறைக்கும். இதனால் பூமியில் இருந்து பார்க்கும்போது சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியளவிலோ மறைந்தது போல தெரியும். அதன்படி, சூரிய கிரகணம் 17ம் தேதி மதியம் 3.26 மணிக்கு தொடங்கி, இரவு 7.57 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி ரிஷிவந்தியத்தில் உள்ள சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில், ஆதிதிருவரங்கத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க அரங்கநாத பெருமாள் கோவில் உட்பட அனைத்து கோவில்களும் 17ம் தேதி மதியம் 3:00 மணியளவில் மூடப்படுகிறது. தொடர்ந்து, 18ம் தேதி காலை கோவில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு, பரிகார பூஜைகள் செய்த பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை