மேலும் செய்திகள்
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு
12-Jun-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோனை கூட்டம் நடந்தது.தாசில்தார் விஜயன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் செங்குட்டவன், மண்டல துணை தாசில்தார் பாண்டியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், எதிர்வரும் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு வெள்ள பாதிப்பு ஏற்படும் போது முதல் நிலை தகவல் அளிப்பவர்கள், தங்களது பகுதியில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,க்களுடன் இணைந்து மக்களை மீட்க வேண்டும். பாதுகாப்பான இடங்களில் மக்களை தங்க வைத்து, மருத்துவ உதவி அளிக்க வேண்டும் உட்பட பல்வேறு ஆலோசனைகள் அளிக்கப்பட்டது.கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ., க்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் முதல்நிலை தகவல் அளிப்பவர்கள் பங்கேற்றனர்.
12-Jun-2025