கவர்னருக்கு நினைவு பரிசு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கம்பன் கழக பொறுப்பாளர்கள் கவர்னருக்கு நினைவு பரிசுகளை வழங்கினர்.சென்னை கவர்னர் மாளிகை, பாரதியார் மண்டபத்தில், கம்பனையும், ராமனையும் கொண்டாடும் கம்ப சித்திரம் விழா நடந்தது. கவர்னர் ரவி தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார். விழாவில் கம்ப ராமாயண சிறப்பினை பரப்புரை செய்து வரும் தமிழறிஞர்கள் சுதாசேஷய்யன், முத்தையா, பழனியப்பன், ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் ஹண்டே உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட கம்பன் கழகம் சார்பில் பங்கேற்ற மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜன், கவர்னர் ரவிக்கு பொன்னாடை அணிவித்தார். செயலாளர் மதிவாணன், ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். பொருளாளர் அம்பேத்கர் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நுாலினை வழங்கினார். முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட கம்பன் கழக பணிகளை கேட்டறிந்து கவர்னர் பாராட்டினார்.