உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு நிகும்பலா யாகம்

பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு நிகும்பலா யாகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு நிகும்பலா யாகத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகர் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் உலக அமைதி, நாட்டு நலன், தோஷ நிவர்த்தி வேண்டி மிளகாய் வற்றல் கொண்டு அமாவாசை தோறும் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று, ஐப்பசி மாத அமாவாசையையொட்டி, பத்ர காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பத்ர காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து தாலாட்டு பாடல்களுடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பெண் பக்தர்கள் குங்குமார்ச்சனை செய்தனர். அதைத் தொடர்ந்து, பத்ரகாளி கவசம் பாடி ஒரு மணி நேரத்தி ற்கு மேலாக மிளகாய் வற்றல் யாகத்தீயில் சேர்த்து நிகும்பலா யாகம் நடந்தது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவக்குமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ