உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்த முகாமை சார் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். திருக்கோவிலுார் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களை சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங் நேரில் ஆய்வு செய்தார். ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த சிறப்பு முகாமில் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களிடம் முகாமை செம்மையாக நடத்த அறிவுறுத்தினார். உடன் தாசில்தார் ராமகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ