உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு

கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மார்கழி துவாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை, அன்னம்பாலிப்பு நடந்தது.திருக்கோவிலூர், தெற்கு வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மார்கழி துவாதசி சிறப்பு பூஜையை முன்னிட்டு, காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து அன்னம் படையலிடப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆரிய வைசிய சங்க தலைவர் வாசுதேவன், துணைத் தலைவர் கோல்டுரவி தலைமை தாங்கினர். சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை