உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஞானானந்தா மெட்ரிக் பள்ளியில் விளையாட்டுப் போட்டி விழா

ஞானானந்தா மெட்ரிக் பள்ளியில் விளையாட்டுப் போட்டி விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஞானானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திருக்கோவிலுார், ஞானானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. புவனேஸ்வரி முகில்வண்ணன் வரவேற்றார். ஆண்டாள், டாக்டர்கள் ஸ்ரீதேவிநாச்சியார், அஞ்சனவண்ணன் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் முகில்வண்ணன் தலைமை தாங்கி, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜ், கூடைப்பந்து வீரர் ஜெகன்தியானேஸ்வரன் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் சுகுணாசரவணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி