உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத்திறனாளிளுக்கு விளையாட்டு போட்டிகள்

மாற்றுத்திறனாளிளுக்கு விளையாட்டு போட்டிகள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிளுக்கான முதலமைச்சர் விளையாட்டு போட்டிகள் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது.இதில் கண் பார்வை குறைபாடு, கை, கால், மனநலம் மற்றும் காதுகேளாதர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டபந்தயம், குண்டு எறிதல், வாலிபால், எறிபந்து, கபடி உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி வளாகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். போட்டிகளை உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை