உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் விளையாட்டு மைதானம் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பு

கள்ளக்குறிச்சியில் விளையாட்டு மைதானம் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பு

கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் அதற்கான எந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இதுவரை நிறைவு பெறாமல் இருந்து வருகிறது.மாவட்ட தலைநகருக்கு ஏற்றவாறு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான புதிய திட்ட பணிகளும் இதுவரை துவங்காமலேயே இருப்பது இப்பகுதி விளையாட்டு வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் மற்றும் தி.மு.க.,வின் மாவட்ட செயலாளர்களான எம்.எல்.ஏ.,க்கள் இருவரும், தமிழக துணை முதல்வரான விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியிடம் சிறப்பு அனுமதி பெற்று விளையாட்டு மைதான அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை