சிறந்த எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஸ்ரீ ரமணா பப்ளிக் பள்ளி
பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் நம்பிக்கையை வளம் பெறச் செய்து, சிறந்த எதிர்கால தலைமுறையை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீ ரமணா பப்ளிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பள்ளியின் தாளாளர் பாஸ்கரன் கூறினார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: கிராம பகுதியை மையமாகக் கொண்டு திருக்கோவிலுார் - எலவனாசூர்கோட்டை சாலையில் காட்டுசெல்லுாரில் ஸ்ரீ ரமணா பப்ளிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. முற்றிலும் கிராமப் புறத்தையே உள்ளடக்கிய இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்விக் கனவு மேம்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தன் பிள்ளைகள் நன்கு படித்து, உயர் பதவியில், ஒழுக்கமிக்கவர்களாக வளர வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் ஆசை. இதனை மனதில் கொண்டு மாணவர்களின் கல்வி மேம்பட சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்மார்ட் கிளாஸ், நவீன ஆய்வுக்கூடங்கள், இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான சூழலில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்றுவித்து வருகிறோம். மாணவர்களின் தனி திறனை கண்டறிந்து சிலம்பம், கராத்தே, யோகா உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப திறமையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பங்களிப்பால் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்விலும் மாணவர்கள் தொடர்ந்து நுாறு சதவீத தேர்ச்சி பெற்று வருகின்றனர். விஜயதசமியை முன்னிட்டு நாளை 'அக் ஷாரபியாஸம்' செய்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இவ்வாறு பள்ளி தாளாளர் பாஸ்கரன் கூறினார்.