உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: கலெக்டர் ஆய்வு கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார். நீலமங்கலம் ஊராட்சி அலுவலகம், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் அருகே, மூலசமுத்திரம் தனியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இந்த முகாம்களில் 13 அரசு துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளை சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகிறது. முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் விவரம், மனுக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து கலெக்டர் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை துறை வாரியாக பதிவு செய்து வழங்க அறிவுறுத்தி, மனுக்களை முறையாக பதிவு செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியன், தாசில்தார்கள் கள்ளக்குறிச்சி பசுபதி, உளுந்தூர்பேட்டை அனந்த கிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.