உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 2,110 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சங்கராபுரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். மலையரசன் எம்.பி., டி.ஆர்.ஓ., ஜீவா முன்னிலை வகித்தனர். மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா வரவேற்றார். முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகளிர் மருத்துவம், குழந்தைகள் நலம், இருதய நலம், நரம்பியல், பொது மருத்துவம், பல், கண், காது மூக்கு தொண்டை, சர்க்கரை நோய், மன நலம், சித்த மருத்துவம் ஆகிய மருத்துவர்கள், பொதுமக்கள் 2,110 பேருக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரை மற்றும் ஆலோசனை வழங்கினர். முகாமில் பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி, செயல் அலுவலர் சங்கரன், துணை சேர்மன் ஆஷாபீ, ஒன்றிய செயலாளர் கதிரவன், நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை, வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணன், தாசில்தார் வைரக்கண்ணன், பி.டி.ஓ.,க்கள் நாராயணசாமி, ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை