உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாநில அளவிலான செஸ் போட்டி; பள்ளி மாணவனுக்கு பாராட்டு

மாநில அளவிலான செஸ் போட்டி; பள்ளி மாணவனுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி; திருப்பத்துாரில் மாநில அளவிலான சதுரங்கம்(செஸ்) போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர். இப்போட்டியில் கள்ளக்குறிச்சி அடுத்த பெரியமாம்பட்டு துவக்கப் பள்ளியைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவன் ஜெகத் ஆதித்யா என்பவர் பங்கேற்று, 5ம் இடம் பிடித்தார். கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., கார்த்திகா, மாநில அளவிலான செஸ் போட்டியில் 5ம் பிடித்த மாணவன் ஜெகத் ஆதித்யாவை வரவழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட உற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ