மேலும் செய்திகள்
கிறிஸ்தவ சர்ச்களில் பெரிய வியாழன்
18-Apr-2025
மூங்கில்துறைப்பட்டு,; மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மூங்கில்துறைப்பட்டு, சவேரியார்பாளையம், மைக்கேல்புரம், ஈருடையாம்பட்டு,காணங்காடு,அருளம்பாடி ஆகிய பகுதிகளில் நேற்று சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது. புனித வெள்ளியையொட்டி, கடந்த மாதம் தவக்காலம் துவங்கியது. இதனை தொடர்ந்து விபூதி புதன், குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து நேற்று புனித வெள்ளியை கிறிஸ்தவர்கள் அனுசரித்தனர். ஈருடையாம்பட்டு, தூய விண்ணரசி ஆலயத்தில் இயேசுநாதர் போல் வேடம் அணிந்த ஒருவரை சிலுவை சுமக்க வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பிரார்த்தனை நடைபெற்றது.
18-Apr-2025