உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருடுபோன மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருடுபோன மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருடுபோன மற்றும் தவறவிட்ட 40.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1204 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மொபைல் போன் திருட்டு மற்றும் தொலைந்து போனது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.இதனையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மற்றும் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரணை நடத்தி, திருடு போன மற்றும் தவறவிட்ட ௧204 மொபைல் போன்களை கண்டுபிடித்து மீட்டனர். இவற்றின் மதிப்பு 40 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகும். மீட்கப்பட்ட மொபைல் போன்களின் உரியவர்கள் அனைவரையும் நேற்று, கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்திற்கு வரவழைத்து எஸ்.பி., ரஜத்சதுர்வேதி உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ