மேலும் செய்திகள்
புகார் பெட்டி கள்ளக்குறிச்சி
01-Sep-2025
இருளில் மேம்பாலம் : வாகன ஓட்டிகள் அச்சம்
13-Sep-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. மாநில சாலையோரம், குடியிருப்பு தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் கும்பல் கும்பலாக சுற்றித் திரியும் தெரு நாய்களால் மக்கள் தெருக்கள் வழியாக நடந்து செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் தெருவில் நடந்து செல்ல முடிவதில்லை. நாய்கள் துரத்துவதால் முதியோர்கள் கால் தவறி கிழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி, பொதுமக்களை நாய் கடியிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
01-Sep-2025
13-Sep-2025