உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கராத்தே போட்டியில் மாணவன் சாதனை

கராத்தே போட்டியில் மாணவன் சாதனை

மூங்கில்துறைப்பட்டு; கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த மாணவன் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்கள் பங்கு பெற்றனர்.இப்போட்டியில் மூங்கில்துறைப்பட்டு கே. சி. எஸ். எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் அன்புச்செல்வன் பங்கு பெற்று இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றார். அன்புச்செல்வன் இதற்கு முன்பு மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்றுவெற்றி பெற்றுள்ளார். அன்புச்செல்வனுக்கு பள்ளி, மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். வீரம் விளையாட்டு அறக்கட்டளையில் பயிற்சி பெற்ற மாணவருக்கு மாஸ்டர்கள் அண்ணாமலை, வின்சென்ட் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை