உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வலி நிவாரணி மாத்திரை சாப்பிட்ட மாணவர் பலி

வலி நிவாரணி மாத்திரை சாப்பிட்ட மாணவர் பலி

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே அளவுக்கு அதிகமான தலை வலி மாத்திரை சாப்பிட்ட எட்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த கா.பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். குடும்பத்துடன் நிறைமதியில் வசிக்கின்றனர். இவரது மகன் ஹரி, 12, கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந் த, 3ல் ஹரிக்கு தலைவலி ஏற்பட்டதால், அவரது தாய் ரஞ்சிதா சாப்பிடும் வலி நிவாரணி மாத்திரைகள், ஒன்பதை சாப்பிட்டு துாங்கினார். கடந்த, 4ம் தேதி காலை ஹரி எழவில்லை. அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் ஹரியை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஹரி உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி