சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக ஆய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எஸ்.பி., மாதவன், டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்பான நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நேரத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்டாத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.