உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் ரூ.1.85 கோடியில் சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு

சங்கராபுரத்தில் ரூ.1.85 கோடியில் சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் ரூ1.85 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலக கட்டட திறப்பு விழா நடந்தது.சங்கராபுரத்தில் கடந்த ஆண்டு புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ. 1.85 கோடி ஒதுக்கீடு செய்தது. புதிய கட்டடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்தது.இந் நிலையில் சென்னையில் நேற்று நடந்த விழாவில் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். சங்கராபுரத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட பதிவாளர் ரூபியாபேகம் தலைமை தாங்கினார்.சார்பதிவாளர் ஆசைதம்பி வரவேற்றார்.உதயசூரியன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.நிகழ்ச்சியில் சங்கராபுரம் யூனியன் சேர்மன் திலகவதி நாகராஜன், பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி, நகர செயலாளர் துரை, அ.பாண்டலம் ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன், செங்குட்டுவன், தயாளன், பாலு, கமருதீன், ரவி, உதவி செயற்பொறியாளர் ராஜூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ