உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி! நிரந்தர தீர்வுக்கு போலீஸ் நடவடிக்கை எடுக்குமா

சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி! நிரந்தர தீர்வுக்கு போலீஸ் நடவடிக்கை எடுக்குமா

மாவட்ட தலைநகரமான, கள்ளக்குறிச்சியில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்குகிறது. நகரின் முக்கிய சாலைகளான கச்சேரி சாலை, காந்தி ரோடு, சேலம் சாலை ஆகிய சாலைகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் பல உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவிலான பள்ளி, கல்லுாரி வாகனங்கள் நகரை கடந்து செல்கின்றன.நீண்ட நேரம் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் சாலையை கடந்து செல்வதற்கு மிகந்த சிரமம் ஏற்படுகிறது.போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடிய முக்கிய இடங்களில் 'நோ பார்க்கிங்' போர்டுகள் வைத்தும், விதிமுறைகளை மீறி வாகனங்கள்நிறுத்தப்படுகிறது.கச்சேரி சாலை மற்றும் காந்தி ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,வங்கிகள், அரசு அலுவலங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்றம் போன்ற பல்வேறு அரசு அலுவலங்கள் உள்ள நிலையில், சாலையோரம் தாறுமாறாக இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள், தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு வருகிறது.இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் காந்தி ரோடு, கச்சேரி சாலை வழியாக சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களும் சென்று வரும் நிலையில், அவ்வப்போது வாகன நெரிசலில் சிக்கி தவிக்கிறது. கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் அரசு துறைகளின் பல்வேறு மாவட்ட அலுவலர்களும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றனர்.இதற்கிடையே சில நேரங்களில் சாலையில் நடந்து செல்வோர் மீது கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் சூழ்நிலையும் அவ்வப்போது ஏற்படுகிறது. நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வகையில் சாலையோரம் தாறுமாறாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நிரந்த தீர்வுக்கு போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்து போலீசாரும் அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை ஒழுங்கபடுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை