மேலும் செய்திகள்
உயிர் பலி தடுப்பு பிரசாரம்
14-Jul-2025
சங்கராபுரம்; பூட்டை கிராமத்தில் உயிர்பலி தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவிழாவில் பங்கேற்று ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைப்பர். கோவில் வளாகத்தில் உயிர்பலி கொடுப்பதை தவிர்க்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நேற்று காலை சங்கராபுரம் வள்ளலார் மன்றம் சார்பில் உயிர்ப்பலி தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முன்னதாக நடந்த கூட்டத்திற்கு வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் மூர்த்தி, சக்கரவர்த்தி, வள்ளலார் மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி தலைவர் ஜீவா கொளஞ்சி, முன்னாள் தலைவர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். வள்ளலார் மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். அதைத் தொடர்ந்து நடந்த பேரணியில், வள்ளலார் பள்ளி மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பேரணியின்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. விஜயகுமார், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் சவுந்திரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். டாக்டர் நாச்சியப்பன் நன்றி கூறினார்.
14-Jul-2025