வேளாண் இயக்க திட்டத்தில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கல்
தியாகதுருகம்: வேங்கைவாடி கிராமத்தில் ஊட்டசத்து வேளாண் இயக்கம் திட்டம் துவக்கி வைத்து விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது.வேளாண் உதவி இயக்குனர் ரகுராமன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ஆதிமூலம், துணை தலைவர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். துணை வேளாண்மை அலுவலர் சிவநேசன் வரவேற்றார். துணை தோட்டக்கலை அலுவலர் செந்தில் இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்வது குறித்து விளக்கினார்.வேளாண்துறை மூலம் துவரை, தட்டை பயிறு, அவரை விதை தொகுப்பும், தோட்டக்கலை துறை மூலம் காய்கறி விதை தொகுப்பு, கொய்யா, பப்பாளி, நெல்லி பழச் செடிகள் தொகுப்புகளை, நுாறு சதவீத மானியத்தில் வழங்குதல் குறித்தும், உழவன் செயலி அல்லது வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து பயிறு வகைகள், காய்கறி விதை, பழமரச்செடிகள் தொகுப்பு மற்றும் நுண்ணுாட்ட உரம், உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் துரைராஜ், உதவி தோட்டக்கலை அலுவலர் சவுந்தராஜன் செய்திருந்தனர்.