மரக்கன்று வழங்கல்
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை ஸ்ரீ சிவாலய பள்ளி மற்றும் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி, ஊர்வலம் நடந்தது.நிகழ்ச்சிக்கு சிவாலய பள்ளி தாளாளர் வினோதினி தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினர் உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கினார்.பள்ளி முதல்வர் வசந்தகுமார், அப்துல் கலாம் அறக்கட்டளை தலைவர் முருகன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.