மேலும் செய்திகள்
ஆட்சி மொழி சட்ட வாரம் விழிப்புணர்வு ஊர்வலம்
19-Dec-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தை கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், ஆட்சிமொழி தொடர்பான பதாகைகளை ஏந்தியபடி பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு வரை ஊர்வலமாக சென்றனர்.தொடர்ந்து ஆட்சிமொழிச் சட்ட வாரத்தில் ஆட்சிமொழிப் பட்டிமன்றம், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்திட வலியுறுத்தி கலந்தாய்வுக் கூட்டம், அரசு பணியாளர்களுக்கான ஆட்சிமொழி ஆய்வும், குறை களைவு நடவடிக்கைகள், மொழிப்பயிற்சி, மொழி பெயர்ப்பும் கலைச் சொல்லாக்கம், கணினித்தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், தமிழில் வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு, ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் ஆகிய நிகழ்வுகள் நடக்கிறது என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார்.ஊர்வலத்தில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் சித்ரா, தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
19-Dec-2024