டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில், டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையார்கள் நலச்சங்க மாநில செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கள்ளக்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது. சங்க சிறப்பு தலைவர் பாரதி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மோகன்ராஜ், முதன்மை ஆலோசகர் ஜேம்ஸ், மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் சக்திவேல், பொருளாளர் புருேஷாத்தமன் முன்னிலை வகித்தனர்.செயலாளர் ராமஜெயம் வரவேற்றார். மாநில தலைவர் முருகன், பொதுச் செயலாளர் குமார், பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; வரும் ஜூலை 9ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு சட்டசபை முன்பு தர்ணா போராட்டம் நடத்த வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்துரு, கவுரவ தலைவர் சின்னபையன் உள்ளிட்டோர், மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தனர். செய்தி தொடர்பாளர் மோகன்குமார் நன்றி கூறினார்.