உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வழுக்கி விழுந்த டீ மாஸ்டர் பலி

வழுக்கி விழுந்த டீ மாஸ்டர் பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கழிப்பறையில் வழுக்கி விழுந்து காயமடைந்த டீ மாஸ்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்தவர் செல்வம்,46; டீ மாஸ்டர். இவர் கடந்த 9ம் தேதி இயற்கை உபாதைக்காக வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற போது, திடீரென வழுக்கி விழுந்தார். இதில் செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அவரது குடும்பத்தினர் செல்வத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கும், பின் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் இறந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை