உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் பணி நீக்கம்

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் பணி நீக்கம்

கள்ளக்குறிச்சி: மணியார்பாளையம் உண்டு, உறைவிட பள்ளி பகுதி நேர ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை மணியார்பாளையம் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது புகார் எழுந்தது. அதன்பேரில் நடந்த விசாரணையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி தலைமை ஆசிரியர் தனபால் கடந்த 27ம் தேதி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஆசிரியர் ராஜவேல், 53; பகுதி நேர ஆசிரியர் தேவேந்திரன், 40; ஆகியோரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிந்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் 3 பேர் மீதும் வழக்கு பதிந்தனர். அதில் ராஜவேல், தேவேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில், பகுதி நேர ஆசிரியர் தேவேந்திரன் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ