உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவிகளிடம் ஜொல்லு ஆசிரியர் சஸ்பெண்ட் 

மாணவிகளிடம் ஜொல்லு ஆசிரியர் சஸ்பெண்ட் 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் பேசி ஜொல்லுவிட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அன்பழகன்,59; இவர், 6 மற்றும் 8ம் வகுப்பு வரையில், சமூக அறிவியல் பாடம் நடத்தி வந்தார். வகுப்பறையில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார். இது தொடர்பாக, மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். மாணவிகளின் பெற்றோர் பள்ளி ஆசிரியர் அன்பழகன் மீது புகார் தெரிவித்தனர். மேலும், பள்ளி கல்வி துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ஆசிரியர் அன்பழகனிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டதில், மாணவிகளிடம் பேசியது உண்மை என, தெரியவந்தது. இதனையடுத்து ஆசிரியர் அன்பழகனை, சி.இ.ஓ., கார்த்திகா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.இச்சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ