உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஆசிரியர் தின விழா

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஆசிரியர் தின விழா

கள்ளக்குறிச்சி : இந்திலி ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தின விழா நடந்தது. விழாவிற்கு கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். இயற்பியல் துறை தலைவர் அங்குராஜ் முன்னிலை வகித்தார். கல்லுாரி டீன் அசோக் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையுடையவர்களாகவும், மாணவர்கள் கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றில் நாட்டமுடையவர்களாக திகழச் செய்வது ஆசிரியர்களின் பொறுப்பு என்று எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி முதல்வர் தனலட்சுமி, ஹெல்த் சயின்ஸ் உதவிப் பேராசிரியர் பவுலின் சங்கீதா வாழ்த்துரை வழங்கினர். இதில் கல்வி நிறுவன ஆசிரியர்கள், பேராசி ரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெயசீலன் செய்திருந்தார். கல்லுாரி துணை முதல்வர் ஜான் விக்டர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை