உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் பணி

கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் பணி

சங்கராபுரம்: தஞ்சையில் அரசு பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டதை கண்டித்து எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.தஞ்சை மாவட்டம், மல்லிபட்டிணம், அரசு மேல்நிலை பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிய தமிழாசிரியர் ரமணி நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த மதன்குமார் என்ற வாலிபரால் பள்ளி வளாகத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தை கண்டித்தும், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ