உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி 

விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி 

ரிஷிவந்தியம்:பழைய சிறுவங்கூரில் அட்மா திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப் பட்டது. வாணாபுரம் அடுத்த பழைய சிறுவங்கூரில் நடந்த முகாமிற்கு, உதவி வேளாண்மை அலுவலர் வினோத்குமார் தலைமை தாங்கினார். உழவியல் துறை உதவி பேராசிரியர் அய்யாதுரை, நெட்டாபிம் பகுதி மேலாளர் லிங்கமூர்த்தி, உழவியல்துறை சிவசங்கர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உழவு முறைகள், நெல் மக்காச்சோளம், உளுந்து, மணிலா, மரவள்ளி பயிர்களில் நோய் தாக்குதல் மற்றும் பூச்சி மேலாண்மை, சொட்டு நீர் பாசனத்தின் முக்கியத்துவம், பராமரிப்பு பணிகள், இயற்கை விவசாயத்தின் பயன்கள், வேளாண்மை துறை சார்பில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி, உதவி தொழில்நுட்ப மேலாளர் சுகனேஷ்வர், மேரி ஆனந்தி, பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை