உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பழைய சிறுவங்கூரில் கோவில் கும்பாபிேஷகம்

பழைய சிறுவங்கூரில் கோவில் கும்பாபிேஷகம்

ரிஷிவந்தியம்: பழைய சிறுவங்கூரில் திரவுபதி, வரதராஜ பெருமாள், பிடாரி இளங்காளி, பாலமுருகன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.வாணாபுரம் அடுத்த பழையசிறுவங்கூரில் உள்ள திரவுபதி அம்மன், வரதராஜ பெருமாள், பிடாரி இளங்காளி, பாலமுருகன் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 14ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணியளவில் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. பின், மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., உட்பட பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ