உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவனை தாக்கிய தற்காலிக ஆசிரியர் பணிநீக்கம்

மாணவனை தாக்கிய தற்காலிக ஆசிரியர் பணிநீக்கம்

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே மாணவனை குச்சியால் தாக்கிய தற்காலிக ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் தாலுகா, பெரியபகண்டை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அன்பரசன்,37; இவர், அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பாடம் நடத்தி கொண்டிருந்த போது, சரியாக படிக்கவில்லை என 3ம் வகுப்பு மாணவர் ரியாஸ்முரளி,8; என்பவரை குச்சியால் அடித்தார். இதில் மாணவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் மாணவர் வீட்டிற்கு சென்றார். அவர் முதுகில் இருந்த காயத்தை பார்த்து கோபமடைந்த மாணவரின் பெற்றோர், பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியர் ஆரோக்கிய மேரியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். இது குறித்து எழுந்த புகாரின் பேரில், தற்காலிக ஆசிரியர் அன்பரசனை பணிநீக்கம் செய்து, ரிஷிவந்தியம் வட்டார கல்வி அலுவலர் கஜேந்திரன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி