உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரங்கநாத பெருமாள் கோவிலில் பாலாலயம்

அரங்கநாத பெருமாள் கோவிலில் பாலாலயம்

ரிஷிவந்தியம் : ஆதி திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் பாலாலயம் செய்யப்படுவதால், பக்தர்கள் உற்சவர்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாணாபுரம் அடுத்த ஆதி திருவரங்கத்தில் வரலாற்று சிறப்பு மிக்க அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும், 31ம் தேதி காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை மூலவர், ரங்கநாயகி தாயார் மற்றும் கோதண்டராமர், லட்சுமணர் சீதாபிராட்டி சன்னதிகளுக்கு பாலாலயம் செய்யப்படுகிறது. இதனால் அன்றைய தினத்தில் இருந்து கும்பாபிேஷகம் நடக்கும் வரை, பக்தர்கள் மூலவர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்ய முடியாது. மாறாக, கொடிமரத்திற்கு அருகில் உற்சவர் சுவாமிகளை மட்டும் தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !