உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் மகள் பாரதி,21; பி.எஸ்.சி., கணினி அறிவியல் படித்து முடித்தவர் கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே இருந்தார். அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு துாங்கினர். நேற்று அதிகாலை கண் விழித்து பார்த்த போது, வீட்டில் பாரதி இல்லாததால் அதிர்ச்சியடைந்து, பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் தந்தை முருகவேல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை