திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகில் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரகண்டநல்லுார் அடுத்த சு.பில்ராம்பட்டு மதுரா அப்பனந்தல் கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. அங்கு ஆண்டு தோறும் நடக்கும் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த, 16ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று தேர் வீதி உலா மற்றம் தீமிதி விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு அர்ஜுனன் தபசு ஏறும் வைபவம், மதியம் 12:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திரவுபதி அம்மன், மாரியம்மன் தேர் புறப்பட்டது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். மதியம் கூழ் வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு மாடுபிடி சண்டையும் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.