உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / துணிக்கடையில் திருட்டு

துணிக்கடையில் திருட்டு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் துணிக்கடையில் ரூ.55 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி சேலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பார்த்திபன் மகன் சிலம்பரசன்,31; கடந்த 10 ஆண்டுகளாக வீட்டிற்கு அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு சென்றார். நேற்று காலை கடையை திறந்து பார்த்த போது கல்லாப்பெட்டியில் வைத்த ரூ.55 ஆயிரத்தை காணவில்லை. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கடையில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் நள்ளிரவு 2:00 மணியளவில் மர்மநபர் ஒருவர் கடை ெஷட்டரை திறந்து உள்ளே வந்து பணத்தை திருடி சென்றது தெரிந்தது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி