மேலும் செய்திகள்
பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
05-May-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் வரும் 12ம் தேதி நடக்கிறது.திருப்பதியின் ஏற்றம் கொண்ட கள்ளக்குறிச்சி ஸ்ரீபூமி நீளா புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.நேற்று முன்தினம் நடந்த உற்சவத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
05-May-2025