திருக்கோவிலுார் தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
திருக்கோவிலூர், : திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு நகர செயலாளர் சுப்பு வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் பழனி, சேகர், சந்தோஷ், பழனிசாமி, இளங்கோவன், தனபால்ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் குமரகுரு பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார். மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சதீஷ் பாண்டியன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசினர். நகரசெயலாளர்கள் அரகண்டநல்லூர் ராஜ்குமார், திருவெண்ணெய்நல்லூர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் நகர செயலாளர் இளவரசன் நன்றி கூறினார்.