உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருவள்ளுவர் தின சிறப்பு பட்டிமன்றம்

திருவள்ளுவர் தின சிறப்பு பட்டிமன்றம்

சங்கராபுரம்: திருவள்ளுவர் தின விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.சங்கராபுரம் நகர திருக்குறள் பேரவை சார்பில் திருவள்ளுவர் தின சிறப்பு பட்டி மன்றம் நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் குமணன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபதி வரவேற்றார்.சிறப்பு தலைவர் பால்ராஜ், குணா உள்ளிட்டவர் கள் முன்னிலை வகித்தனர். திருவள்ளுவர் பெரிதும் வலியுறுத்துவது தனி மனித அறமா,சமுதாய அறமா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது. புலவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.பட்டிமன்றத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கம்பன் கழக தலைவர் சுலைமான் தொடங்கி வைத்தார். தனி மனித அறமே என்ற அணியில் செல்வமேரி, தமிழரசியும், சமுதாய அறமே என்ற அணியில் ஜெயஸ்ரீ, நந்தினி ஆகியோர் பேசினர்.திருவள்ளுவர் பெரிதும் வலியுறுத்துவது தனிமனித அறமே என்று நடுவர் தீர்ப்பளித்தார்.நிகழ்ச்சியில் தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் நெடுஞ்செழியன், குசேலன், கோவிந்தராஜன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் அதிக அளவில் திருக்குறள் ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. பேரவை பொருளாளர் சாதிக் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை