உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலூர் நீதிமன்ற வளாக தூய்மை பணி

திருக்கோவிலூர் நீதிமன்ற வளாக தூய்மை பணி

திருக்கோவிலூர் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருக்கோவிலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் தூய்மைப்படுத்தும் பணியை நீதிமன்ற ஊழியர்கள் மேற்கொண்டனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருக்கோவிலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்ற சிரஸ்தார் ரமேஷ் வரவேற்றார். சார்பு நீதிமன்ற நீதிபதி திருஞானசம்பந்தம் தலைமை தாங்கி, தூய்மை பணியை துவக்கி வைத்தார். வழக்கறிஞர் சங்க செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் செல்வராஜ் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களின் உதவியாளர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்று நீதிமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !