உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையையொட்டி, இன்று 16ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் துவங்கி, கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையையொட்டி, மாவட்டத்தில், இன்று 16ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (16ம் தேதி) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. கல்லுாரிகள் வழக்கம்போல் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி