கல்வராயன்மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை
கச்சிராயபாளையம்: கல்வராயன்மலைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர துவங்கியுள்ளனர்.கல்வராயன்மலைக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக இங்குள்ள பெரியார் நீர் வீழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் எளிதில் வந்து குளிக்கும் வகையில் சாலையோரத்தில் நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது.கல்வராயன்மலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கல்வராயன் மலையில் நல்ல குளிர்ந்த சீதோஷணம் நிலவி வருகிறது.மேலும், அங்குள்ள பெரியார் நீர் வீழ்ச்சியில் தற்போது குளிப்பதற்கு வசதியாக தண்ணீர் வருவதால் கல்வராயன்மலைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர துவங்கியுள்ளனர்.