உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் நகர மன்ற கூட்டம்  

கள்ளக்குறிச்சியில் நகர மன்ற கூட்டம்  

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னைகளை தீர்க்க, நகர மன்ற கூட்டத்தில் |தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கள்ளக்குறிச்சியில், நகர மன்ற கூட்டம் நேற்று நடந்தது. நகர மன்ற தலைவர் சுப்ராயலு தலைமை தாங்கினார். கமிஷனர் சரவணன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஷமீம்பானு வரவேற்றார். பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் பாண்டு, துப்புரவு ஆய்வாளர் சையத் காதர், நகரமைப்பு ஆய்வாளர் அமலின் சுகுணா, மேலாளர் கருணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமார், சதுர்முகம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், நகரின் 21 வார்டுகளிலும் குடிநீர் பைப் லைன் பழுதுகளை உடனடியாக சீர் செய்ய தேவையான பொருட்களை வாங்க வேண்டும். சிறு மின் விசைப்பம்பு பழுதுகளை போக்க வேண்டும். சேதமடைந்த குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகளை மாற்ற வேண்டும். கோடையில் நகராட்சியில் ஏற்படும் தண்ணீர் பிரச்னைகளை தீர்க்க முன்னேற்பாடு பணிகள் என்பன உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளநிலை உதவியாளர் நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ