மேலும் செய்திகள்
மாதவச்சேரி கிராமத்தில் சாலை மறியல் போராட்டம்
31-Oct-2024
கச்சிராயபாளையம் ; மாதவச்சேரி கிராமத்தில் வயலில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை மர்ம நபர்கள் கிணற்றில் தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மொட்டையன் மகன் சீனுவாசன், 55; இவருக்கு சொந்தமான டிராக்டரை நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உழவு பணி முடித்து விட்டு வயலிலேயே டிராக்டரை நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். மீண்டும் நேற்று காலை 9 மணியளவில் வயலில் சென்று பார்த்த போது டிராக்டர் மாயமாகியது. தொடர்ந்து பல இடங்களில் தேடியும் டிராக்டர் கிடைக்கவில்லை. டிராக்டர் செல்வராஜின் விவசாய கிணற்றில் டிராக்டர் விழுந்ததற்கான தடையம் தெரிந்தது.இதனை தொடர்ந்து விவசாய கிணற்றில் இருந்த நீரை முழுவதும் வெளியேற்றி விட்டு பார்த்த போது டிராக்டரை மர்ம நபர்கள் கிணற்றில் தள்ளி மூழ்கடுத்தது தெரிய வந்தது. தொடர்ந்து கிரேன் உதவியுடன் டிராக்டரை கிணற்றிலிருந்து நேற்று பகல் 1 மணியளவில் மீட்டனர். டிராக்டரை கிணற்றில் தள்ளிய மர்ம நபர்கள் குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
31-Oct-2024