உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

திருக்கோவிலுார்: அரகண்டநல்லூர் அருகே டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழந்தார்.அரகண்டநல்லூர் அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன் மகன் குப்பன், 31; இவர் ஓட்டி சென்ற டிராக்டர் நேற்று கண்டாச்சிபுரம் - திருக்கோவிலூர் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து, மக்காச்சோள வயலில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் குப்பன் டிராக்டருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அதில் அமர்ந்து சென்ற அதே ஊரைச் சேர்ந்த திருமுருகன் மகன் மோகன், 18; ஆறுமுகம் மகன் வெற்றி, 16; இருவரும் காயமடைந்தனர்.அரகண்டநல்லுார் போலீசார் குப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை