உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரகண்டநல்லுார் கமிட்டியில் ரூ. 2.12 கோடிக்கு வர்த்தகம்

அரகண்டநல்லுார் கமிட்டியில் ரூ. 2.12 கோடிக்கு வர்த்தகம்

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம், நெல் வரத்து அதிகரித்ததால் நேற்று ஒரே நாளில் 2.12 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு ஆண்டு முழுவதும் விளை பொருட்கள் வருவதால் எப்பொழுதும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கூட்டத்தால் நிரம்பி வழியும். அந்த வகையில் நேற்று நெல் 3,350 மூட்டை, மக்காச்சோளம் 4,150 மூட்டை, மணிலா 220 மூட்டை, எள் 50 மூட்டை, கம்பு 1120 மூட்டை என 840 மெட்ரிக் டன் அளவிற்கு விளை பொருட்கள் ஏலத்திற்கு வந்தது. இதன் மூலம் 2.12 கோடி ரூபாய்க்கு வர்த்தகமானது. மக்காச்சோளம் வரத்து அதிகரித்த நிலையில், அதன் விலையில் திடீர் குறைவு ஏற்பட்டது. மக்காச்சோளம் ஒரு மூட்டை சராசரி விலையாக 2,199 ரூபாய்க்கு விற்பனையானது. வரும் நாட்களில் மக்காச்சோளம் மற்றும் நெல் வரத்து அதிகரிக்க கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ