உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போக்குவரத்து நெரிசல் : பொதுமக்கள் அவதி

போக்குவரத்து நெரிசல் : பொதுமக்கள் அவதி

சங்கராபுரம்: சங்கராபுரத்தில், போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சங்கராபுரம், பூட்டை சாலையில் பஸ் நிலையம், தனியார் வங்கி, உழவர் சந்தை, சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ் நிலையம், அரசு மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், சினிமா தியேட்டர், பாலிடெக்னிக் கல்லுாரி, அரசு ஐ.டி.ஐ., போன்றவை உள்ளன. இந்த சாலையின் இருபுறமும் இரு சக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள், அரசு பஸ்கள் உள்ளிட்டவை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை