உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் நகரில் டிராபிக் ஜாம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சங்கராபுரம் நகரில் டிராபிக் ஜாம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சங்கராபுரம : சங்கராபுரம் நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சங்கராபுரம் நகரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக மாறி வருகிறது. இப்பகுதி வழியாக சென்னை, பெங்களூரு, வேலுார், திருப்பதி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ் மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து அதிகளவில் செல்கின்றன. நகரைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியவசிய தேவைக்கு தினசரி சங்கராபுரம் வருகின்றனர். அப்படி வருபவர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை கடைகளின் முன் தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனர்.இதனால் காலை, மாலை வேளைகளில் சங்கராபுரம் கடைவீதி மற்றும் பூட்டை சாலையில் ஏதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. போக்குவரத்தை சரி செய்ய போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படவில்லை.இது தொடர்பாக எஸ்.பி.,யிடம் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, சங்கராபுரம் நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய உடனடியாக சங்கராபுரத்திற்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை